Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

காமராஜர் - அவதாரப்பெருமகான்!

காமராஜர்
 

விவரம்  தெரிந்த நாள் முதல், கடைசி உயிர் மூச்சு வரை... நாடு, நாட்டு மக்கள் முன்னேற்றம் பற்றியே சிந்தித்த ஒரு தலைவர்  உண்டென்றால், பெருந்தலைவர் காமராஜர் மட்டுமே. நல்ல உயரம், கருத்த உடல், கூர்மையான பார்வை. கம்பிரமான நடை, எளிமையான 4 முழு வேட்டி, யதார்த்தமான பேச்சு, கள்ளம் கபடம் இல்லாத சிரிப்பு, 24 மணி நேரமும் ஏழை-எளிய மக்களை மேம்படுத்தவது எப்படி என்ற சிந்தனை-இத்தனை சிறப்புகளையும் கொண்ட ஒரு கலவையாகத் திகழ்ந்தார் காமராஜர்.

 மனிதருள் மாணிக்கமான அவர் தமிழ்நாட்டில் கல்விப் புரட்சி, தொழில் புரட்சி, விவசாயப் புரட்சி ஆகிய மூன்றையும் ஒரே சமயத்தில் நிகழ்த்தி காட்டிய வித்தகர்.

 9 ஆண்டு கால அவரது பொற்கால ஆட்சியின் பயனைத்தான் நாம் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். அவர் மட்டும் தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களிடம் கல்விக் கண்ணை திறக்காமல் விட்டிருந்தால், தமிழ் இனம் மீட்சிமை பெற இன்னும் போராட வேண்டிய  நிலை இருந்திருக்கும்.

ஒரு சமுதாயம் விடுதலை பெறும் போதோ அல்லது அடிமைத் தளையில் இருந்து விடுபடும் போதோ, பொருளாதாரத்தை திருத்த நிர்ப்பந்தம் ஏற்படும். அப்போது பொருளாதார வளர்ச்சி கிடைக்குமானால் அந்த சமுதாயம் மேம்படும். அந்த வகையில் தமிழக மக்களுக்கு மிகச் சரியான காலக் கட்டத்தில், சரியான பொருளாதார மறுமலர்ச்சியை காமராஜர் ஏற்படுத்திக் கொடுத்தார்.

 மற்ற மாநிலங்களை விட, தமிழகம் இன்று எல்லா துறைகளிலும் தலை நிமிர்ந்து நிற்கிறது என்றால், அதற்கு பெருந்தலைவர் காமராஜர் அமைத்துக் கொடுத்துள்ள வலுவான அடித்தளமே காரணமாகும்.

 அது மட்டுமின்றி இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்கும் தன்னிகரற்ற தலைவராகவும் காமராஜர் மிளிர்ந்தார்.  2 பிரதமர்களை உருவாக்கி, உலகத் தலைவர்களை அவர் ஆச்சரியப்பட வைத்தார். படிக்காத மேதையான அவர் சுண்டு விரல் உத்தரவுக்கு இந்தியாவே தலை தாழ்த்தி நின்றது. அவர் எடுத்த முடிவுகளுக்கு காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமல்ல, மாற்றுக் கட்சித் தலைவர்களும் கட்டுப்பட்டனர்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், அவர் ஒரு அவதார பெருமகானாக வலம் வந்தார். நாட்டில் வறுமை,கஷ்டம் வரும் போது கடவுள் அவதாரம் எடுப்பார் என்று புராணங்களில் படித்திருக்கிறோம்.

காமராஜரும் அப்படி ஒரு அவதார பிறப்பு என்றே சொல்லலாம். வாடி, வதங்கிக் கிடந்த மக்கள் வாழ்வில் வளம் ஏற்படுத்திய அவர் அவதார பெருமகானாகக் கருதப்பட்ட காரணத்தால்தான் எல்லா தரப்பு மக்களும் அவரைகண்கண்ட தெய்வம்" என்றனர். அவர் செய்த சாதனைகள், சமுதாய மாற்றங்களை ஒரு கண்ணோட்டமாக பார்த்தால், ஆச்சரியம் மட்டுமல்ல மிரட்சியும் கூட ஏற்படும்.

Post a Comment

0 Comments