Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மெழுகுவர்த்தி தயாரிப்பது எப்படி?


மெழுகுவர்த்திகள்- Candles

இருட்டில் வெளிச்சத்தை அளிக்கும் சாதனங்களுள் ஒன்று மெழுகுர்த்தி.

அவசர காலத்திற்கு உதவக் கூடியது. இக்காலத்தில் நாம் மின்சாரத்தை நம்பியிருக்கிறோம். அது எந்தநேரத்தில் பழுதடைந்து விளக்குகள் அணைந்து போகும் என்று சொல்ல முடியாது.

அந்த நேரங்களில் மெழுகுர்த்தியைக் கொளுத்தி வெளிச்சத்தை உண்டாக்கிக் கொள்ளலாம்.

வேறு விளக்குகளுக்கு சிமிழ், திர, எண்ணெய் என்று ஒவ்வொன்றையும் தேடவேண்டும்ஒன்று இருந்தால் ஒன்று இருக்காது.  அப்படி எல்லாம் இருந்துவிட்டால் சிமிழ் கைத்தவறி விழுந்து உடைந்து விடும்அந்த வகை எந்தத் தொந்தரவுமின்றி உதவும் சாதனம் மெழுகுவர்த்தி.

சிறு தொழிலில் மெழுகுவர்த்தி தயாரிப்பது மிக எளிதானது. இதற்குப் படிப்பறிவோ அனுபவமோ வேண்டாம்வேண்டிய பொருள்களும் செய்யும் முறையையும் அறிந்து கொண்டால் போதும். சுலபமாகச் செய்துவிடலாம்.

குடும்பத்திலுள்ள அனைவருமே ஒன்று கூடி செய்யவல்ல குடிசைத் தொழில் இதுஇதற்கு பெரிய பரந்த இடம் வேண்டாம். அதிக முதலீடும் வேண்டாம். பெரிய பெரிய கருவிகளும் தேவை இல்லை.                                                                                

மெழுகுவர்த்திக்கான மூலப் பொருள்கள்:

1. பாரஃபின் மெழுகு

2. ஸ்டீரிக் சிட்

3. சாயப்பொடி 

4. திரி

மெழுகுவர்த்தி செய்வதற்குத் தேவையான பாத்திரங்கள் அல்லது சாதனங்கள்:

1. அடுப்பு

2. பெரிய பாத்திரம்

3. மூக்கு வைத்த பாத்திரம்

 4. மரத்தினாலான துடுப்பு

5. வடிகட்ட துணி

6. வார்த்தெடுக்க அச்சு.

கடின பராஃபின் - Hard Paraffin


மெழுகில்
இரு வகை உண்டு.

1.கடின பாரஃபின் (Hard Paraffin)

2. இளகிய பாரஃபின் (Soft Paraffin)

மெழுகுவர்த்தி செய்ய இளகிய பாரஃபின் பயன்படுத்தக் கூடாது. இது மருத்துவத் துறையில் பயன் படுத்தப்படுகிறது.

கடின பாரஃபின் தான் மெழுகுவர்த்தி செய்ய பயன்படும். இதில்கூட 40 டிகிரி ஆற்றலுள்ள மெழுகு, 35 டிகிரி ஆற்றலுளள மெழுகு என இரு வகை உண்டு.

I)                    40 டிகிரி ஆற்றலுள்ளது மெழுகுவர்த்தி செய்யப் பயன்படாது.

II)                  35 டிகிரி ஆற்றலுள்ள பாரஃபின் மெழுகுதான் மெழுகுவர்த்திக்கும் பயன்படக்கூடியது.

இது வெண்மை நிறத்தில் இருக்கும்.

இவைத்தவிர தேன் மெழுகு, மஞ்சள் மெழுகு என்ற வகை உள்ளன. இவற்றில்கூட மெழுகுவர்த்தி தயாரிக்கலாம்.

எந்தவகை மெழுகாக இருந்தாலும் அதைச் சுத்தமாக வடிகட்டிய பின்பே அச்சுகளில் வார்த்து எடுக்க வேண்டும்.

ஸ்டீரிக் ஆசிட் - Stearic Acid


மெழுகு
செய்யத் தேவையான அடுத்த மூலப் பொருள் ஸ்டீரிக் சிட் (Stearic Acid) இது திரவமல்ல.

கண்ணாடித் துண்டுகள் போன்று பளபளப்புடையது. புளிப்புச் சுவையுடனும் உள்ள பொருள். இது மருந் துக் கடைகளில் கிடைக்கும்.

சாயப்பொடி - Colorants for Candles Preparations


சாயப்பொடி
என்பது நாம் தயாரிக்க இருக்கும் நிறத்தின் தன்மையைப் பொருத்தது.

அதனால் தேவையான நிறத்தில் வாங்கிக் கொள்ளலாம். அது மெழுகில் கரையக் கூடியதாக இருக்கவேண்டும்

மெழுகுத்திரிகள் - Thread for Candles Preparation


திரி
என்பது சாதாரண விளக்கு திரிபோன்று கடைகளில் கிடைக்கும். இதில் இழைகள் உண்டு.

உயர் தரமான மெழுகுவர்த்தி தயாரிப்பதாக இருந்தால் அதன் கனத்துக் கேற்ப மூன்று, நான்கு இழைகளைக் கொண்டதாக இருப்பது நல்லது.

மெழுகுவர்த்தி வார்த்தெடுக்க அச்சுகள் மிக அவசியமானவை. அவற்றை கடைகளில் வாங்கி மெழுகுவர்த்திகளைத் தயாரித்துக் கொள்ளலாம்.

சாதாரண மெழுகுவர்த்தி 

தேவையான பொருட்கள்:

பாரஃபின் மெழுகு - 2 கிலோ

ஸ்டீரிக் சிட்   - 70 கிராம்

செய்முறை:

1.       ஒரு பெரிய பாத்திரத்தில் பாரஃ பின் மெழுகைப் போட்டு உருக்க வேண்டும்.

2.       அது எண்ணெய் போன்று உருகியதும் ஸ்டீரிக் சிடைக் கொட்டி மரத் துடுப்பினால் நன்றாகக் கலக்க வேண்டும்.

3.       அவை இரண்டும் கலந்து உருகியதும் அடுப்பிலிருந்து இறக்கி மெல்லிய துணியில் வடிகட்டி எடுக்க வேண்டும்.

4.       பின்பு சூடு கொஞ்சம் தணியும் வரைப் பொருத்திருந்து மூக்கு வைத்த பாத்திரத்தில் எடுத்து திரிகள் வைக்கப்பட்ட அச்சுகளில் மெதுவாக ஊற்ற வேண்டும்.

மெழுகுவர்த்தி அச்சு - Moulds for Candles Preparation

சிறிது நேரத்தில் சூடு ஆறி கெட்டிப்பட்டிருக்கும்.

அச்சமயம் அச்சுகளைப் பிரித்து வத்திகளை வெளியில் எடுக்க வேண் டும்.

இவ்வத்தி மங்கலான வெள்ளை நிறத்தில் இருக்கும்.

நீண்டுள்ள திரிகளைக் கத்தரித்து விட வேண்டும்.

மெழுகுவர்த்தியின் மேல் பிசுறுகள் காணப்படலாம். அதை கத்தியால் லேசாகச் சுரண்டிய பின் சமதள பரப்புள்ள பலகையின் மீது வர்த்திகளை மெதுவாக உருட்டி எடுக்க சமமாகும்.

பின் பாக் செய்து விற்பனைக்கு அனுப்பலாம்

கப் மெழுகுவர்த்தி

கப் மெழுகுவர்த்திகள்


 அச்சுகளில் வார்த்து எடுக்கப்படும் மெழுகுவர்த்திக்கும்  இதற்கும் வித்தியாசம் உண்டு. அச்சு மெழுகுவர்த்தி எரிய எரிய மெழுகு உருகி வழிந்து வெளியேறிவிடும். அத்துடன் அதன் சுற்று இடமும் மெழுகு ஒட்டிக் காய்ந்திருக்கும்.

ஆனால், கப் மெழுகுவர்த்தியில் மெழுகு உருகி வெளியேற வழியில்லை.

அதனால் தன்னுள்ளேயே உருகி எரிந்து கொண்டே இருக்கும். நீண்ட நேரம் எரியும். சுற்று இடம் எந்த பாதிப்புக்கும் உள்ளாகாது.

இதற்குத் தேவையான கப் மெல்லிய தகடுகளில் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும்.

இதனை செய்பவர்களிடம் ஆர்டர் கொடுத்து செய்து வாங்கிக் கொள்ளலாம்.

அந்தக் கப்பின் விட்டத்திற்கு ஒரு குச்சியை ஒடித்து அதன் மத்தியில் திரியைக் கட்டி கப்பின் மத்திய பாகத்தில் தொங்குமாறு கப்பின் மேல் பகுதியில் அக்குச்சியை படுக்கை வேண்டும். வாட்டத்தில் வைக்க வேண்டும்.

மெழுகை உருக்கி கப்பில் முக்கால் பகுதி ஊற்றி ஆறிய பிறகு மேலுள்ள குச்சியைச் சுற்றியுள்ள திரியை வெட்டி குச்சியைத் தனியே எடுத்து எறிந்துவிட வேண்டும்.

இப்போது கப் மெழுகுவர்த்தி தயாராகிவிடும். இதை எந்த நிறத்திலும் மெழுகு தயாரித்து ஊற்றலாம்.

Post a Comment

0 Comments