Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

படிப்படியாகத் தோன்றிய பரிணாம வளர்ச்சி - அறிவியல் கட்டுரைகள்

 



இந்த உலகமும், அதன் உயிர்களும், எப்போது, எவ்வளவு கால கட்டத்திற்குள் தோன்றியது?

"தோன்றிவில்லை. உலகமும், அதன் உயிர்களும் படைக்கப்பட்டன. அதுவும், ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்-ஆறே நாட்களில்

-இப்படி அடித்துக் கூறும் பலரை இன்றும் நம்மால் காணமுடியும்.

ஆனால், உண்மை என்ன?

இதனை அறிந்துக்கொள்வதில் பரிணாமக் கோட்பாடும் ஃபாசில்கள் (Passils) எனப்படும் தொல்லுயிர் எச்சங்களும் நமக்குப் பேருதவியாய்  இருக்கின்றன.

எனவே, இவை இரண்டைப் பற்றியும் மிகச் சுருக்கமாகத் தெரிந்துக் கொள்வோம்.

இது தான் பரிணாமக் கோட்பாட்டின் சாராம்சம்:

சந்தர்ப்பச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப, உயிர்ப் பொருட்களின் தோற்றத்தில் மாறுதலை இயற்கை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும். இது தலைமுறை தோரும் காப்பாற்றப்படும்.

ஒரு உறுப்பை பயன்படுத்தினால், அது வளர்ச்சி அடையும். இல்லாவிட்டால் அழிந்துவிடும்.

வாழ்க்கைப் போராட்டத்தில் பலம் பொருந்திய இனங்களே பல்கிப் பெருகும். அப்படி இல்லாதவை அடியோடு அழிந்து விடும்.

அடுத்து, ஃபாசில்களைப் (Passils)  பற்றி?



முற்காலத்தில் வாழ்ந்துப் புதைந்த உயிரினங் களின் எச்சங்களே (அதாவது, அழுகிவிட்ட சதை போக, எஞ்சியிருக்கும் எலும்புக் கூடு போன்ற வையே) பாசில்கள் எனப்படும்.

பொதுவாக, பூமியை அகழ்ந்தெடுக்கப்படும் இவைகளைக் கொண்டு அந்தப் பிராணியின் உருவம், வாழ்ந்த காலம், அப்போதைய பூமியின் சூழ்நிலை போன்ற அரிய விபரங்களைத் தவறின்றி அறிய இயலும்.

உதாரணமாக, இப்போதையத் தரைப் பகுதியில் சிப்பிகள் போன்ற உயிர்களின் ஃபாசில்கள் பெருமளவில் தோண்டி எடுக்கப்பட்டால் அதற்கு என்ன பொருள்?

முன்னொரு காலத்தில் அவ்விடம் கடலாக இருந்திருக்க வேண்டும் என்பதுதானே?

குளிர் ரத்த, வெப்ப பிராணிகளின் எச்சங்களும் அக்கால சீதோஷ்ண நிலையை அறிய உதவிகரமாக இருக்கின்றன.

மேலும், பிற சோதனைகளின் மூலம் பல விஷயங்களைத் துல்லியமாகக் கணிக்கமுடியும்.

                இவற்றின் உதவியோடு 90 கோடி ஆண்டுகள் முன்பிருந்த உலகம். அதில் பரிணமித்திருந்த உயிர்களின் வளர்ச்சிகளையும் கூட விஞ்ஞானிகள் சரியாக வரையறுப்பதில் வெற்றி பெற்றுள்ளனர்.

ஆக.. இந்த உலகம் ஒருவழியாகத் தோன்றி விட்டது. ஆனால், இன்னும் முழுவளர்ச்சி பெற்றுவிட வில்லை. எங்கும் சேர், சகதி, இருட்டு.

காரணம், சரித்திரம் இன்னும் முழுமை பெறவில்லை.

பாதிக்கு மேற்பட்ட நீர் ஆகாயத்திலேயே அடர்ந்த மேகங்களாகத் தேங்கி நின்றன. எனவே, சூரிய வொளிக்குப் பூமியைத் தழுவ அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

பூமி எப்போது முழுமை பெறுவது? அதுவரை நான் பொறுத்திருக்க முடியாது' என்று அவசரப்பட்டது. 'உயிர் தோன்றல்' என்ற இயற்கை நியதி அது தன் பணியைத் துவங்கியும் விட்டது.

பலனாக, கடல் நீரில் கலந்திருந்த அமினோ அமிலங்கள் ஒன்றையொன்று அணைக்க ஆரம்பித் தன். பூரிப்படைந்துப் புரோட்டீன்களாயின. இதுவே பூமியின் மீது உருவான முதல் உயிர் வடிவமாகும்.

இப்படியொரு இயற்கை நிகழ்வு சாத்தியமே சோதனைப் பூர்வமாக நிரூபிக்கப்பட்டு என உள்ளது, இங்கு நினைவுக் கூறத்தக்கது.

 

பின்னர் சில சிக்கலான வளர்ச்சிப் பருவங்களை அடைந்தன அப்புரோட்டீன்கள். சூழலுக்கேற்ப சில பலம் பெற்றன. பல வலுகுன்றின. பலம் வாய்ந்தவை, உரம் குன்றியவற்றை ஒடுக்கிக் கிரகித்தன.

அவையே பிறகு மென்மையான நுண்ணுயிர் களாகப் பரிணமித்தன. அவற்றின் உணவு உலோகத் துகள்களே.

பல கோடி வருடங்களுக்சுப் பின் வானம் தெளிவுற்றது. இதுவே தக்கத் தருணமென, சூரியக் கதிர்கள் பூமியைக் குத்தின.

ஒளியின் நற்கிரியையால்,  புரோட்டீன்கள் குளோரோஃபில் என்ற அற்புதப் பொருளைப் பெற்றன. அப்பொருளுக்குக் காற்றில் கலந்துள்ளக் கார்பன் அணுக்களை ஜீரணித்து, அதன் பயனாகச் சக்தியைத் தரும் வல்லமை உண்டு.

சக்தி பெற்ற உயிர்ப்பொருட்கள் தங்களின் இயக்கங்களை குறிப்பாக, இடப்பெயர்ச்சியை துவங்கின. ஜீவராசிகளின் அடுத்த வளர்ச்சி அது.

இந்தச் சமயத்தில் தான் கேப்பிரியன் யுகம் தோன்றியது. அதாவது, கால சிக்கலின்றிக் குறிப்பிடுவதற்காக, கட்டங்களைச் அவைகளைப் பல யுகங்களாகப் பிரித்துள்ளனர் விஞ்ஞானிகள், எல்லாம் வசதிக்காகத்தான்.

1.      கேப்பிரியன் யுகம்

அதன்படி கேப்பிரியன் யுகம் என்பது முதல் யுகம் அதாவது, இன்றிலிருந்து 80 கோடி ஆண்டு களுக்கு முற்பட்டக் காலத்தை இது குறிக்கின்றது. இதற்கும் முற்பட்ட உயிர்களின் ஃபாசில்கள் நமக்குக் கிடைக்கவில்லை.

தற்போது நடந்துக்கொண்டு இருப்பது ஹோலோசின் யுகம். இது கி. மு. 8000-9000 ஆண்டிலிருந்து ஆரம்பித்துள்ளது. ஒவ்வொரு யுகமும் பலகோடி ஆண்டுகளைக் கொண்டவை.

சரி, நாம் ஆதிக்கே செல்வோம்.

கேம்பிரியன் யுக ஆரம்பத்தில் உயிர்கள் நிறைய பரிணாம வளர்ச்சி அடைந்து விட்டன. அப்போது டிரைலோபைட் (Trilobite)என்ற கணுக்காலி இனம் தோன்றிவிட்டது.

அது மட்டும் அல்ல. அவை தங்கள் உணவைத் தாங்களே தேடவும், எதிரிகளிடமிருந்துத் தப்பிக்கவும் தெரிந்துவைத்திருந்தன.

ஆர்டோவிசியன் யுகம்

அடுத்து வந்தது ஆர்டோவிசியன் யுகம்.

அச்சமயத்தில் புதிய கடல் பரப்புகள் தோன்றின. பல வற்றவும் செய்தன. உயிர்வாழ்வதற்குத் தேவையானச் சீதோஷ்ன நிலை மேலும் சீரடைந்தது.

உயிர்களின் பரிணாமமும் சிறிது வளர்ச்சி அடைந்தன. மென்மையான உடலமைப்பு விரைவான இடப்பெயர்ச்சிக்கும், சிக்கலான வாழ்க்கைப் போராட்டத்திற்கும் சரிப்பட்டு வரவில்லை விளைவாக, அவற்றிற்குக் கவச (ஓடு) அமைப்பு தோன்றியது. எதிரிகளிடமிருந்துத் தங்களைக் காத்துக் கொள்வதும் அவற்றுக்குச் சாத்தியமானது. இக்கலத்தில் டிரைலோபைட் இனம் ஒரு அடி நீளம் வரை வளர்ந்துவிட்டது.

சைலூரான் யுகம்

இன்றிலிருந்து 36 கோடி வருடங்களுக்கு முன்னால் தோன்றியது அடுத்த யுகமான சைலூரான் யுகம். அப்போதுதான் எலும்புகளைக் கொண்ட மீன் இனங்கள் தோன்றியதாக ஆராய்ச் சியாளர்கள் கருதுகின்றனர்.

டிவோனியன் யுகம்

தொடர்ந்து வந்தது டிவோனியன் யுகம் (31 கோடி வருடங்களுக்கு முற்பட்டது.) இப்பருவத்தில் பெரிய மலைகள் தோன்றின. முன் யுகத்தின் உயிரினங்கள் மேலும் வளர்ச்சி அடைந்தன. தாவர இனங்கள் செழித்து வளர்ந்தன. நிலக்கரிப் படிவு கள் முதன் முதலில் தோன்றியது இக்காலத்தில்தானாம். நட்சத்திர மீன் போன்ற இனங்கள் புதிதாகத் தோன்றின.

சிலவகைப் புழுக்களுக்கு அப்போது உடலின் மையத்தில் நீளவாட்டில் ஒரு கம்பிபோன்ற கெட்டி யான அமைப்புத் தோன்றியது. அதற்கு உதாரணம் லான்ஸெலெட்டு புழு.இது இப்போதும் வாழ்கின்றன. அந்தக் கம்பி போன்ற அமைப்பே நாளடைவில் முள்ளெலும்புத் தொடராக மாறி யது என நம்பப்படுகின்றது.

பெர்மியன் யுகம்

அடுத்தது பெர்மியன் யுகம் வறட்சியுடன் ஆரம்பித்தது. எனவே அப்போது, ஏறக்குறைய எல்லா உயிரினங்களுமே அடியோடு அழிந்தன. சில மட்டுமே அபூர்வமாகத் தப்பிப் பிழைத்தன. மாறிய சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப அவை தங்களின் உடலை மாற்றிக்கொண்டன.

நீர் கிடைக்காமையால் நிலத்திற்கு வந்த யூரிப் இனத்தின் சில உயிரினங்களே மரவட்டை, பூரான், தேள், சிலந்தி போன்றவவையாக உருமாறின. சில காற்றில் பறக்கும் பூச்சிகளாகப் பரிணாமம் அடைந்தன.

டிரையாசிக் யுகம்

இதனை அடுத்து வந்தது டிரையாசிக் யுகமாகும். இக்காலத்தில் வறட்சி உச்சநிலையை அடைந்திருந்தது. எனவே, பூமியைக் கவ்வியிருந்தப் பனிப்படிவுகள் காணாமல் போயின. பல வகையான முதுகெலும்பற்ற நிலவாழ் உயிரினங்கள் இக்காலத்தில்தான் பல்கிப் பெருகச் சந்தர்ப்பம் வாய்த்தது.

சிறிய வடிவ பிராணிகள் தோன்றி, முட்டையிட்டுக் குஞ்சு பொறித்தன. ஊர்வன மற்றும் பாலூட்டிகளின் மூதாதைகள் தோன்றியக் காலமும் இதுவே. பலவகையானப் புதிய தாவர வகைள் உண்டாகிச் செழித்தனஆனால், அவை பூவையோ. கனியையோ அறிந்திருக்கவில்லை. ஸ்போர்கள் மூலமாகவே அவை இனப்பெருக்கம் செய்தன

ஜூராசிக் யுகம் 

அடுத்து வந்த ஜூராசிக் யுகத்தில் பூகோள மாற்றங்கள் நிறைய ஏற்பட்டன. குறிப்பாக அன்றுவரை இருந்த மலைகள் தேய்ந்துக் குன்று களாயின. சதுப்பு நிலக்காடுகள் பெருகின. நமது இமயமலை தோன்றியதும் இக்காலத்தில்தான்.

உயிரினங்களை எடுத்துக்கொண்டால், மீன் இனங்களுக்குப் பற்கள் தோன்றியது.



அது மட்டும் அல்ல. டினோசார் என்ற ராட்ச உருவமுடைய பிரம்மாண்டமான விலங்குகள் தோன்றியது இந்தக் காலக்கட்டத்தில்தான்.

அவற்றில் முக்கியமானவை 20 அடி நீளத்திற்குப் பருத்து, முதுகில் பாதுகாப்பு நீட்சிகளுடன் திரிந்த ஸ்டெகோசாரஸ், 100 அடி நீளம் கொண்ட ப்ராண்ட்டஸாரஸ், டிப்லடாக்கள் என்ற பல்லி இனங்கள் ஆகும்.இந்த யுகத்தில் வாழ்ந்த புரோட்டோஸி ராடாப்பு என்ற கொம்பு முளைத்த டினோசாரின் முட்டை நமக்குக் கிடைத்துள்ளது.

பல்லி மற்றும் பறவை இனத்திற்கு இடைப் பட்ட ஆர்க்கியோப்டிரிக்ஸ் என்ற உயிரினமும் இக்காலத்தில்தான் தோன்றியது. இன்றைய பறவையினங்களின் மூதாதை இந்த ஆர்க்கியோப் டிரிக்ஸ்தான்.

மெஸோஸோய்க் யுகம்

திடீரென மெஸோஸோய்க் யுகத்தின் இறுதியில் டினோசார்களின் இனங்கள் முற்றிலுமாக அழிந்து விட்டன. இவற்றின் அழிவுக்கு மாறிய சீதோஷ்ன நிலையும், சூறாவளிப் புயல்களும் காரணமாக இருக்கலாம் என சிலர் கருதுகின்றனர். இதுபற்றி வேறு பல கருத்துக்களும் நிலவுகின்றன.

பாலுட்டிகளின் தாயன்பு அதிகரிக்கவே, அவற்றில் பால் தரும் உறுப்புக்கள் தோன்றிவளர்ச்சியுற்றதும் இந்த யுகத்தில்தான்

கிரிடேசியன் யுகம்

பின் வந்த கிரிடேசியன் யுகத்தில் மாபெரும் கடல் கோள்கள் சம்பவித்தன. உயிரினங்களின் உடலில் நுண்ணமைப்புகள் ஏற்பட்டன.

இயோசின் யுகம்

இயோசின் யுகம் அடுத்து வந்தது. அது இன்றைக்கு ஆறுகோடி ஆண்டுகளுக்கு முற்பட்டக் காலக்கட்டம்.

இக்காலத்தில் நீர், நில அமைப்புகளில் பெருத்த மாற்றங்கள் ஏற்பட்டன.மேலும், தாவர வகைகள் இன்று காணப்படும். நிலைக்கு வளர்ச்சியைப் பெற்றன. பாலூட்டிகள் உலகெங்கிலும் பல்கிப் பெருகிவிட்டன. இன்றுக் காணப்படும் பல பிராணி வர்க்கங்களின் மூதாதை கள் தோன்றிய காலம் இதுவே.

ஆனால், அவற்றின் உருவம். மானவை உதாரணமாக, குதிரை. போன்றவை அப்போது பூனையின் வித்தியாச ஒட்டகம் அளவே இருந்தன. மூன்றடி உயரம் இருந்த யானைக்குத் துதிக்கை கிடையாது. (விருப்பமுடையவர்கள் பலதாட்டு மியூசியங்களிலுள்ள ஃபாசில்களைக்  கண்டு வந்து நம்பவும்).

முக்கியமான விஷயம்மனித இனம் என்ற ஒரு பிராணியே அப்போது உலகில் கிடையாது. ஆனால் பலவகையானக் குரங்குகள் மரங்கள் தோறும் மகிழ்வுடன் சேஷ்டைகள் புரிவதில் லயித்திருந்தன.

ஒலிகோசின் யுகம்

இந்தக் காலக் கட்டத்தில் ஒலிகோசின் யுகம் வெதுவெதுப்பாகத் தொடங்கியது. புல்வெளிகள் பூமியை அழகு செய்தன. நெய்வேலி பழுப்பு நிலக்கரிப் படிவுகள் தோன்றிய காலம் இதுவே என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



நாளடைவில் பாலூட்டிகளின் முதல் தலை முறை முற்றிலுமாக அழிந்தன. குதிரை, ஒட்டகம் போன்றவை பரிணாம வளர்ச்சியின் விளைவாக முன்னேற்றம் அடைந்தன. அக்காலக் குதிரைகளுக்கு மூன்றுக் குளம்புகள். (மூன்று விரல்கள் பெற்றிருந்த டினோசார்களின் வழித்தோன்றல்கள் தானே?) யானைக்குத் துதிக்கை நீட்சி அடைந்தது. காண்டாமிருகம் வளர்ந்து பாலூட்டியானது.

ஆப்ரிக்கக் காடுகளில் சிம்பன்ஸி என்ற ஒரு குரங்கினம் வாழ்ந்து வந்தது. இதுவே குரங்கிற்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட ந்து என கருதப்படு கின்றது.

மையோசின் யுகம்

மையோசின் யுகம் உதயமானது. கூடவே, இமயமலையும் இன்றைய நிலையை அடைந்தது. நீர், நில சீதோஷ்ண நிலைகளில் மீண்டும் மாற் றங்கள் ஏற்பட்டன.

பிளியோசின் யுகம்

அடுத்து ஆரம்பித்த பிளியோசின் யுகத்தின் போது, உலக புவியியல் அமைப்பு இன்றைய நிலையை அடைந்தது. தாவர, விலங்கினங்கள் ஏறக்குறைய முழு பரிணாம வளர்ச்சியை அடைந்தன.

பாலூட்டிகள் வெப்ப, குளிர் ரத்த ஓட்டங்களைப் பெற்றன. எனவே, அவற்றின் மூளை வளரும் சந்தர்ப்பமும் உருவாக்கப்பட்டது. குறிப்பாக பிரைமேட்ஸ் இனத்தின் வளர்ச்சி உச்ச  கட்டத்தை நோக்கி விரைந்துக் கொண்டு இருந்தது.         

 அவை ஆரம்பத்தில் மரங்களில் தாவித் திரிந்து வாழ்க்கை நடத்தியதால், கைகள் நன்கு வளர்ச்சி பெற்றன. பின்னர் அவை தரைக்கு இடம் மாறின. எனவே, கால்கள் கிளைகளைப் பற்றும் திறமையை இழந்தன. தட்டையாக மாறின. பிளைஸ்டோசின் யுகம் பத்து லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. பிரைமேட்ஸ் இனத்தின் வளர்ச்சி மேலும் உச்சக்கட்டத்தை அடைந்த  போது...

மனிதன் தோன்றினான்.

ஹோமோஸேபியென்ஸ் என்ற மனிதயினம் ஆப்ரிக்காவில் தோன்றியது. 1959-ஆம் ஆண்டு கிழக்கு ஆப்ரிக்காவில் ஸின்ஜானத்திரோப்பஸ் என்ற மனித ரகத்தின் எச்சங்கள் கிடைத்தன. அதாவது 17,50,000 ஆண்டுகளுக்கு முந்தைய நமது மூதாதைகளின் ஃபாசில்கள்!

மேலும் கி.மு. 500,000இல் பித்தெக்கான்த் திரோப்பஸ் ஆதிமனிதன் என்ற கிழக்கிந்திய ஜாவா தீவுகளில் தோன்றினான்.

அதன்பிறகு சீனா, யுரேனஸ் போன்ற இடங் களில் பல இனங்கள் தோன்றின. தங்களுக்குள் வாழ்க்கைப் போராட்டங்களை நடத்தின.

விளைவாக, வல்லமை படைத்த இனம் அழியாமல் செழித்தது.

நியாண்டெர்த்தால் இனத்துக்கும் குரோமாக்னான் இனத்திற்கும் ஏற்பட்ட சண்டையில் குரோமாக்னான் இனம் வென்றது.இவர்கள் உயரமான, சிவந்த நிறமுடைய வர்கள்.  ஓய்வு நேரத்தில் குகைச் சுவரில் ஓவியம் தீட்டி மகிழ்ந்தனர். பேச்சுக் கலையைக்கூட  இவர்கள் அறிந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது. இவர்கள் பரிணாம வளர்ச்சி அடைந்து அழிவதற்கு முன் தங்கள் வாரிசுகளை உருவாக்கி அவர்களை இந்தப் பூமியின் பொக்கீஷங்களாக விட்டுச் சென்றனர்.

அந்தப் பொக்கீஷங்கள் நாம்தான்.

Post a Comment

0 Comments